குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு:-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கப் போகின்றாரா என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா கேள்வி எழுப்பியுள்ளார்.
மிகவும் இழிவான கட்சி தலைமையகத்திற்கு முன்னால் கூக்குரல் எழுப்பிக்கொண்டு பாத யாத்திரை நகர்ந்தது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் அந்த தரப்பிற்கு அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினர் இனவாத, கடும்போக்குவாத, ஜாதிவாத கொள்கைகளையே பின்பற்றுகின்றனர் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்னும் ஒரு படி சென்றால் அவர்கள் பயங்கரவாத சக்திகளாக உருவாகிவிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ தனது மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ள தெரிந்து கொள்ள வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த சவால் விடுக்க முயற்சித்தால் நாமும் அந்த சவால்களை ஏற்றுக்கொண்டு சவால் விடுக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஒரு வெண்டக்காய் கிடையாது, தனியாக வெளியேற சென்று பெரும் தலைவர்கள் என சொல்லிக் கொள்வோரை அவர் தோற்கடித்துள்ளார் என விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.