225
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் ஒருவா் தவறான முடிவெடுத்து உயிாிழந்துள்ளாா்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய எல்லாளன் என அழைக்கப்படுகின்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா மரியஜேசுதாசன் எனத் தெரியவருகிறது.
மேலும் குறித்த நபர் நேற்றைய தினம் (17) பகல் 12.40 மணியளவில் தனது வயல் நிலத்திற்குச் சென்று நஞ்சருந்திய நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத்திற்குள் ஒரு வாரத்திற்கு மேலாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையிலேயே குறித்த நபர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார் என பொது மக்கள் கூறுகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love