281
யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும் இளைஞன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அணியினர் , வீதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற நவாலி பகுதியை சேர்ந்த இளைஞனை சந்தேகத்தில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்
அதன் போது குறித்த மோட்டார் சைக்கிளுக்கு வாகன பதிவு மேற்கொள்ளப்படாது , பதிவின்றி மோட்டார் சைக்கிள் காணப்பட்டமையால் , இளைஞனை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்களையும் காவல்துறையினா் கைப்பற்றினர். இளைஞனை தொடர்ந்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love