Home இலங்கையாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, சொகுசு கார், மோட்டார் சைக்கிள், 2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பவற்றை மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை , வாகனங்களுக்கு தீ வைத்தமை , நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் , குறித்த சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறைனர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக , வீடு உடைப்புக்கள், வாகனங்களுக்கு தீ வைத்தல் உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More