189
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 85 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்து.
மீனவர்களை விடுதலை செய்வது குறித்து ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக் கடற்படையினர் தமிழகர் மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை இலங்கைக் கடற்படையினர் நிராகரித்துள்ளனர்.
Spread the love