Home இலங்கையாழ்.வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் ,வாங்கியவரும் கைது!

யாழ்.வீதியில் கண்டெடுத்த தொலைபேசியை விற்றவரும் ,வாங்கியவரும் கைது!

by admin

வீதியில் கண்டெடுத்த கைத்தொலைபேசியை 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த நபரையும் , அதனை வாங்கியவரையும் காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கன்னாதிட்டி பகுதியில் உத்தியோகஸ்தர் ஒருவர் தனது பெறுமதியான கைத்தொலைபேசியை கடந்த 14ஆம் திகதி தவறவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து , யாழ்ப்பாண காவல்  நிலையத்தில் , தனது கைத்தொலைபேசி தவறவிடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன் போது , தொலைபேசி தவறவிடப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் கண்காணிப்பு கமராக்களை பரிசோதித்த போது, வீதியில் காணப்பட்ட கைத்தொலைபேசியை இளைஞன் ஒருவர் எடுத்து செல்வது பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில் இளைஞனை அடையாளம் கண்டு அவரை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்த வேளை, இளைஞன், கைத்தொலைபேசியை முழங்காவில் பகுதியை சேர்ந்த இளைஞனுக்கு 76 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்து தொலைபேசியை வாங்கிய இளைஞனை காவற்துறையினர் ர் கைது செய்து, தொலைபேசியையும் கைப்பற்றி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முற்படுத்த காவற்துறையினர்  நடவடிக்கை எடுத்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More