Home இலங்கைவாள் வெட்டு – ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர் கைது!

வாள் வெட்டு – ஒரு வருடத்தின் பின் சந்தேகநபர் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றின் பிரதான சந்தேக நபர் சுமார் ஒருவருட கால பகுதிக்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்

மானிப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினரின் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தேகநபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More