Home இலங்கையாழுக்கு போலி அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றி வந்தவர் கைது!

யாழுக்கு போலி அனுமதிப்பத்திரத்துடன் மணல் ஏற்றி வந்தவர் கைது!

by admin

போலி அனுமதி பத்திரத்துடன் டிப்பர் வாகனத்தில் மணல் கடத்தி சென்ற காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றி சென்ற நபரை மீசாலை புத்தூர் சந்தியில் சாவகச்சேரி காவற்துறையினர் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

அதன் போது மணல் ஏற்றி செல்வதற்கான அனுமதி பத்திரம் என டிப்பர் சாரதி காவற்துறையினருக்கு வழங்கிய ஆவணம் போலியானது என காவற்துறையினர் கண்டறிந்து சாரதியை கைது செய்ததுடன் , டிப்பர் வாகனத்தினையும் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

விசாரணைகளின் பின்னர் டிப்பர் சாரதியை இன்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை சாரதியை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More