Home இலங்கைகாணாமல் போனர் விசாரணை யாழ்ப்பாணத்தில்!

காணாமல் போனர் விசாரணை யாழ்ப்பாணத்தில்!

by admin

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளிடம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (16.08.24)  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

உடுவில், கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களிடையே விசாரணைகள் இடம்பெற்றன.

இவ்விசாரணைகள் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தினால் உடுவில் பிரதேச செயலகத்தில் முன்னெடுக்கப்பட்டது.

நாளைய தினம் சனிக்கிழமை பருத்தித்துறை, மருதங்கேணி, கரவெட்டி பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திலும், நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், சங்கானை, சண்டிலிப்பாய், காரைநகர் , நல்லூர், சாவகச்சேரி, நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்தோருக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலும் விசாணைகள் இடம்பெறவுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More