Home இலங்கைஉயர் நீதிமன்றின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி!

உயர் நீதிமன்றின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி!

by admin

தேர்தல் ஒன்றை பிற்போடுவது தவறான செயல் என நீதிமன்றம் அங்கீகரித்தமை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணய தேசியக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அனுராதபுரத்தில் வைத்து கருத்து தெரிவித்த  அவர்,

“எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் அல்லது ஒத்திவைப்பதன் ஊடாக மக்களின் உரிமைகள் மீறப்படுவதாக உயர் நீதிமன்றம் இதற்கு முன்பு பலமுறை தீர்ப்பளித்துள்ள நிலையில், ​​இந்த தீர்ப்பு தொடர்பில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

நீதி வழங்கப்பட்டுள்ளதாகவே கருதுவதாக குறிப்பிட்ட அவர் ஆனால் மிகவும் தாமதம். இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் முடிந்தவுடன் இந்த ஆண்டு இந்த வாக்கெடுப்பை நடத்த ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More