297
யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகு விபத்துக்கு உள்ளான நிலையில் , கடலில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.
மாதகல் பகுதியை சேர்ந்த கடற்தொழிலாளியான நாகராஜா பகீரதன் (வயது 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
மாதகல் பகுதியில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை கடற்தொழிலுக்காக இருவர் படகொன்றில் சென்ற சமயம் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
அதன் போது படகில் இருந்த இருவரும் கடலில் மூழ்கிய நிலையில் , அருகில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த சக கடற்தொழிலாளர்கள் அதனை கண்ணுற்று , படகு கவிழ்ந்த இடத்திற்கு விரைந்து ஒருவரை காப்பாற்றி இருந்தனர்
மற்றையவர் கடலில் மூழ்கி காணாமல் போன நிலையில் , அவரை தேடும் பணிகள் நேற்றைய தினம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் காலை காணாமல் போனவரின் சடலம் கரையொதிங்கியுள்ள
Spread the love