2016ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபையானது 11 பில்லியன்கள் ரூபாய் இலாபமீட்டியுள்ளது எனவும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றிற்கு 83 வீத வளர்ச்சியாகும் எனவும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் பல்வேறுப்பட்ட சவால்களிற்கு மத்தியிலேயே இவ்வெற்றியை ஈட்டிக்கொண்டதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இலங்கை துறைமுக அதிகாரசபை ஈட்டிக்கொண்ட இலாபம் ரூபாய் 44 பில்லியன்களாகும் எனவும் இவ்வருமானத்தில் செயற்பாடுகள் செலவு, நிர்வாக செலவு, கடன் வட்டி மற்றும் வேறு செலவுகளை கழித்த பின்னர் கடந்த ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபை ஈட்டிய இலாபம் ரூபாய் 11 பில்லியன்களாகும் என அவர் தெரிவித்துள்ளார்.