209
மடகஸ்கரில் சூறாவளித் தாக்கம் காரணமாக 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மடகஸ்காரின் வடகிழக்கு தீவுப் பகுதியில் வீசிய கடுமையான சூறாவளிக் காற்றுக்கு எனாவோ என பெயரிடப்பட்டுள்ளது.
சூறாவளி தாக்கத்தினால் பத்தாயிரம் பேர் இருப்பிடங்களை இழந்துள்ளனர். இதெவேளை மடகஸ்கரின் தலைநகர் Antananarivo உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கடுமையான காற்று தொடர்ந்தும் வீசி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love