கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள ஆரம்ப பாடசாலையின் விடுதியொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 17 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் பலா் காணாமல் போயுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவா்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
150க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்ததாக குறித்த விடுதியில் நள்ளிரவு வேளையில் ஏற்பட்ட இந்த தீவிபத்தில் 9 முதல் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களே உயிாிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்ற போதிலும் குறித்த விடுதியில் அதிக நெரிசல் காணப்பட்டதுடன் தங்குமிட பாதுகாப்பு தரங்கள் முறையாக பேணப் படாமை போன்ற காரணங்களால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாமென அந்நாட்டு காவல்துறையினர் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.