Home இலங்கைரணிலின் பிரசார திட்டங்கள் வீழ்ச்சி – 30 பேரணிகள் முழுமையாக இரத்து!

ரணிலின் பிரசார திட்டங்கள் வீழ்ச்சி – 30 பேரணிகள் முழுமையாக இரத்து!

by admin

ஜனாதிபதி தேர்தலுக்காக 90 பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரப் பிரிவு திட்டமிட்டிருந்த போதிலும், அத்திட்டம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக  கூறப்படுகிறது.

குறிப்பாக 30 பேரணிகள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரச்சாரம் தொடங்கிய நாள் முதல் அவர் நடத்திய பேரணிகளின் எண்ணிக்கையும், மீதமுள்ள இலக்குகளை அடுத்த 10 நாட்களில் நிறைவு செய்ய முடியாத நிலையும் இ ருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கொழும்பில் குறைந்தது ஆறு தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சார அலுவலகத்தில் பாரியளவில் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த அலுவலகத்தின் தலைவர்கள், எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமது சார்பாக பயன்படுத்துவதற்காக ஏற்கனவே பெருந்தொகையான பணத்தை சேகரித்து வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More