Home இலங்கை 05 இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம்

05 இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம்

by admin

 

05 இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கியுள்ளார். , இராஜாங்க அமைச்சர்களாக கீதா குமாரசிங்க, ஷசீந்திர ராஜபக்ஷ , அமித் தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோரே இவ்வாறு பதவி  நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனா்.

நேற்றையதினம்  (09)  கீதா குமாரசிங்க    ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாசவுடன்  இணைந்து கொண்ட அதேவேளை   ஷசீந்திர ராஜபக்ஷ, தேனுக விதானகமகே, பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக ஆகியோா்  ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More