192
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூவரை பிணையில் விடுதலை செய்து மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (11) உத்தரவிட்டுள்ளது.
தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கெஹலிய ரம்புக்வெல்ல 2024 பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 7 மாத காலமாக அவாினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை மனு விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love