கனடாவுக்குள் மாணவர் விசாவில் ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவர் நுழைந்துள்ள விவகாரம் தற்போது சர்வதேச மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கனேடிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் பின்னணியில் இந்த விவகாரம் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட 20 வயதுடைய முகமது ஷாசீப் கான் என்பவர் கியூபெக்கில் காவற்துறையினரால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் கடந்த2023 ஆம் ஆண்டு மே மாதம் மாணவர் விசாவில் கனடாவிற்குள் பிரவேசிதுள்ளமை தெரியவந்துள்ளது. கனடா அரசாங்கம் ஏற்கனவே புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
இந்நிலையில், குறித்த ஐ.எஸ் ஆதரவாளர் மாணவர் விசாவில் கனடாவுக்குள் பிரவேசித்துள்ளதால், சர்வதேச மாணவர்களுக்கான விசா நடைமுறையில் கனடா மேலும் இறுக்கங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் , சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவு வழங்க அரசியல்வாதிகள் எவரும் முன்வராத நிலையில், மாணவர்கள் தற்போது ஆதரவின்றி இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் பல மாணவர்கள் சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், சிலர் எப்படியாவது கனடாவில் தங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.