370
நைஜீரியா, விவசாயிகள், படகுவிபத்து, நைஜீரியாவில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தமது விவசாய நடவடிக்கைகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டிய நிலையில் 70 பேருடன் குறித்த படகு சென்ற போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் மீட்கப்பட்டுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love