197
யாழில். 16 நாள் குழந்தை உயிரிழப்பு
கிருமி தொற்று காரணமாக 16 நாள் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த 01ஆம் திகதி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.
அந்நிலையில் குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய வேளை , பால் குழந்தையின் வாயில் இருந்து வெளியே வந்துள்ளது.
அதனை அடுத்து தாயையும் குழந்தையையும் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அந்நிலையில் குழந்தை 16ஆம் திகதி உயிரிழந்துள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் போது கிருமி தொற்றே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

யாழில். குப்பி விளக்கின் தீ பற்றியமையால் மூதாட்டி உயிரிழப்பு!
குப்பி விளக்கில் இருந்து ஆடையில் தீ பற்றியமையால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பகுதியை சேர்ந்த நிக்லஸ்ப்பிள்ளை வல்லமரி (வயது 88) எனும் மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இரவு வீட்டின் வெளியே குப்பி விளக்குடன் சென்ற போது , விளக்கின் தீ ஆடையில் பற்றிக்கொண்டது. அதனை அடுத்து வீட்டார் தீயை அணைத்து , மூதாட்டியை காப்பற்றி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழில். தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்தவர் உயிரிழப்பு!
தூக்கத்தில் கட்டிலில் இருந்து சரிந்து கீழே விழுந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் கடமையாற்றி வரும் காத்தான்குடியை சேர்ந்த நீரான் சாய்பு முகமது மர்சூ என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவர் கட்டிலில் படுத்து உறங்கிய நிலையில் , தூக்கத்தில் கட்டிலில் இருந்து கீழே விழுந்து மயங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது , அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கைகையிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love