153
யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை என யாழ்ப்பாண மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் பதில் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
யாழ் . மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (19.09.24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் நேற்றைய தினம் வியாழக்கிழமை (19.09.24) வரையில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. அதேவேளை தேர்தல் சட்ட விதிமுறை மீறல்கள் தொடர்பில் 43 முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்
Spread the love