548
சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுசெல்லப்பட்ட குஷ் போதைப்பொருளுடன் நபா் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறைப் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட கொட்டுகுடா பகுதியைச் சேர்ந்த 56 வயதான சந்தேகநபரிடம் இருந்து ஒரு கிலோ 883 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love