360
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை கையளித்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்ககளை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், குருசாமி சுரேந்திரன் , எம்.கே சிவாஜிலிங்கம், பா. கஜதீபன், சி. சிவகுமார் , சசிகலா ரவிராஜ், சிவநாதன் நவீந்திரா, ஜெ. ஜெனார்த்தனன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
Spread the love