151
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். தமிழரசு கட்சி, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலகத்தில் கையளித்தது.
அதனை தொடர்ந்து வேட்பாளர்களில் ஒருவரான நாடளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி. சிறிதரன் மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராசா வீட்டுக்கு நேரில் சென்று , அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் சிறிதரன் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டும் தலைமை பொறுப்பை இன்னமும் ஏற்காத காரணத்தால் மாவை சேனாதிராசாவே தலைவராக செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் கடந்த 07ஆம் திகதி தலைமை பொறுப்பை உடனடியாக ஏற்குமாறு கடிதம் மூலம் மாவை சேனாதிராசா சிறிதரனிடம் கோரி இருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love