142
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 23 அரசியல் கட்சிகளும் , 23 சுயேட்சைகுழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 2 சுயேட்சை குழுக்களின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ் , தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டிடுவதற்காக 23 அரசியல் கட்சிகளும் 23 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனுக்களை கையளித்திருந்தன.
வேட்பு மனுக்களை கையேற்கும் காலம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து 30 நிமிடங்கள் ஆட்சேபனைகளை முன் வைக்க கால அவகாசம் வழங்கப்பட்டது அதனை தொடர்ந்து இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அந்நிலையில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சை குழுக்களும் தேர்தலில் போட்டியிடவுள்ளன. அதில் 396 பேர் வேட்பாளராக களமிறங்கியுள்ளனர். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 93ஆயிரத்து 187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love