226
காதலியுடன் ஏற்பட்ட ம் முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள் ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டி , முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த போது , வீட்டில் வசிக்கும் யுவதிக்கும் இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் , தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்து உள்ளமையால் காதலனே தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து தாக்குதல் சந்தேக நபரான காதலனை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love