237
இந்தியா மீது கனடா பொருளாதார தடை விதிக்க ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக, கனடாப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சுமத்திய குற்றம் சாட்டினை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது
Spread the love