954
நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு காவல்துறைகுற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த வாகனத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் இந்த சொகுசு வாகனத்தினை தனக்கு அனுப்பி வைத்ததாக காவல்துறையினாிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக நீர்கொழும்பு காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love