341
சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. சாவகச்சேரியில் ரவிராஜின் உருவச் சிலை அமைந்துள்ள நினைவு சதுக்கத்தில் முன்னாள் நகர சபை உறுப்பினர் ஞா.கிஷோர் தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ரவிராஜ் அவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இந்நிகழ்வில் ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
Spread the love