1.2K
காலி வீதி, அம்பலாங்கொடை – உரவத்த பிரதேசத்தில், இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கணவன் மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதாக, அம்பலாங்கொடை காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை – மாதம்பே, தேவகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் அம்பலாங்கொடையில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, இனந்தெரியாத ஆயுததாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.
Spread the love