Home இலங்கைமழையை சாதகமாக பயன்படுத்தி 52 பவுண் நகை 08 இலட்ச ரூபாய் பணம் திருட்டு

மழையை சாதகமாக பயன்படுத்தி 52 பவுண் நகை 08 இலட்ச ரூபாய் பணம் திருட்டு

by admin

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் , சுமார் 52 பவுண் நகைகள் மற்றும் 08 இலட்ச ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளனர்.  அச்சுவேலி , இராச பாதை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கடும் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் புகுந்த திருடர்கள் நகைகள் மற்றும் பணத்தினை திருடி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மோப்ப நாய் மற்றும் தடயவியல் காவல்துறையினரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர்   கைது செய்து , அச்சுவேலி காவல்  நிலையத்தில் தடுத்து வைத்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More