Home இலங்கைகிணற்றினுள் தவறி விழுந்து பூசகர் உயிரிழப்பு

கிணற்றினுள் தவறி விழுந்து பூசகர் உயிரிழப்பு

by admin

யாழ்ப்பாணத்தில் கிணற்றடியில் குளித்துக்கொண்டு இருந்த பூசகர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சுதுமலை தெற்கு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற பூசகரே உயிரிழந்துள்ளார்.

மரண சடங்கு ஒன்றிற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்று விட்டு , வீட்டுக்கு வந்தவர் கிணற்றில் நீர் அள்ளி தோய்ந்துள்ளார். அவ்வேளை கிணற்றினுள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சடலம் கிணற்றினுள் காணப்பட்டதை அடுத்து , உறவினர்கள் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்ததுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More