20
தளபாடங்கள் தருவதாக வவுனியா வாசியை ஏமாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரை காவல்துறையினா் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் , வவுனியாவை சேர்ந்தவருக்கு தளபாடங்களை வழங்குவதாக கூறி , 20 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்று ஒரு மாத காலத்திற்கு மேலாக தளபாடங்களை வழங்காது மோசடி செய்துள்ளார்.
அது தொடர்பில் வவுனியாவை சேர்ந்தவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து ,விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் கோண்டாவில் பகுதியை சேர்ந்தவரை நேற்றைய தி னம் புதன்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love