Home இலங்கைவீதியோரமாக இருந்தவர்களை மோதிய பேருந்து – தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம்

வீதியோரமாக இருந்தவர்களை மோதிய பேருந்து – தந்தை உயிரிழப்பு மகன் படுகாயம்

by admin
யாழ்ப்பாணத்தில் இரவு நேரம் வீதியோரமாக இருந்தவா்களை பேருந்து மோதியதில் அந்நபர் உயிரிழந்துள்ளதுடன் , அவரது மகன் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  பெரியவிளான் பகுதியை சேர்ந்த மோஷஸ் பாக்கியநாதன் (வயது 76) என்பவரே உயிரிழந்துள்ளார்.
பெரியவிளான் பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தவரும் , அவரது மகனும் வீதியோரமாக இருந்துள்ளனர்.  அவ்வேளை வீதியில் பயணித்த பேருந்து இருவரையும் மோதியுள்ளது. அதில் காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , தந்தை உயிரிழந்துள்ளார். மகன் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்தினை அடுத்து , பேருந்து சாரதி பேருந்தை விபத்து நடைபெற்ற இடத்தில் கைவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இளவாலை காவல்துறையினா்  தெரிவித்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More