Home இலங்கை அநுர – மோடி, திரௌபதி முர்மு சந்திப்பு! ஒரே பார்வையில் இந்திய பயணம்!

அநுர – மோடி, திரௌபதி முர்மு சந்திப்பு! ஒரே பார்வையில் இந்திய பயணம்!

by admin

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு!

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் கூட்டு செய்தியாளர் மாநாடு  இடம்பெற்றுள்ளது.

உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதில்இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றிருந்தனர்

இங்கு ஜனாதிபதி அநுரகுமார, ஒன்றிணைந்த இந்திய பாதுகாப்பு சேவையினரின் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

அநுர – மோடி சந்திப்பு.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள   ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளாா்.  புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது இருதரப்பு தொடா்பான கலந்துரையாடல்  இடம்பொற்றதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு, இன்று திங்கட்கிழமை ( 16.12.24) புது டெல்லியில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவனில் சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி பவனில் வரவேற்றனர்.

இங்கு ஜனாதிபதி அநுரகுமார, ஒன்றிணைந்த இந்திய பாதுகாப்பு சேவையினரின் கௌரவிப்பு மரியாதையை பார்வையிட்டார்.

இதன்போது, ​​இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தத்தமது அமைச்சர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளுக்கு ஒருவரையொருவர் அறிமுகம் செய்து வைத்தனர்.

இலங்கை ஜனாதிபதி டிசம்பர் 15 முதல் டிசம்பர் 17 வரை இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த செப்டம்பரில் பதவியேற்ற பின்னர் அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயம் இதுவாகும்.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, இலங்கை ஜனாதிபதியை டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல் முருகன் வரவேற்றார்.

அவரது வருகையைத் தொடர்ந்து ஜனாதிபதி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இந்திய-இலங்கை பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துதல், பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலா மற்றும் முக்கிய துறைகளை முன்னேற்றுதல் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாடு தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More