14
யாழ்ப்பாண நகரை நோக்கி பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். சுழிபுரம் பகுதியை சேர்ந்த இளையதம்பி சிவசுப்பிரமணியம் (வயது 71) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சுழிபுரம் பகுதியில் இருந்து , யாழ் . நகர் நோக்கி பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீர் சுகவீனம் ஏற்பட்டு பேருந்துக்குள் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
Spread the love