முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை (19) 103 கரையொதுங்கிய படகிலிருந்து மீட்கப்பட்ட . மியன்மாா் அகதிகளும் அவர்களை ஏற்றிச் சென்ற படகில் இருந்த பணியாளர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
குறித்த மியன்மார் அகதிகளை படகுடன் மீட்ட கடற்படையினர், திருகோணமலை துறைமுகத்திற்கு நேற்று (20) கொண்டு சென்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் நீதிமன்றம் இவ்வாறு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது. குறித்த படகில் இருந்து 25 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் , 12 பணியாளர்கள்உட்பட 103 பயணிகள் காணப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.