42
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் மத்தி பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறைப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் இருவரை கைது செய்ததுடன் , அவர்களிடமிருந்து 10 லீட்டர் சட்டவிரோத மதுபானத்தையும் மீட்டிருந்தனர்.
மீட்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்
Spread the love