54
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கைது செய்த கடற்படையினர் குறித்த மீனவர்களையும் படகுகளையும் தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவா்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
இதேவேளை மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்கச்சி மடம் கிராமத்தில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கறுப்பு கிறிஸ்துமஸ் ஆக மாறி விட்டதாக கூறும் மீனவர்களின் உறவினர்கள் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்து தாயகம் அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட 17 மீனவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்ளடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
.
குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்க
Spread the love