யாழ். மறைமாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி புனித மரியன்னை தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
பாசையூர் அந்தோனியார் தேவாலய நத்தார் வழிபாடு
மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு இன்று (25) நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.
-மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது இயேசு பிறப்பினை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும் , நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர் ,அருட்தந்தையர்கள், ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்ததனையடுத்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. கிறிஸ்துமஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் விசேட பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.