முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரதேசத்தில் விடுவிக்கப்படாத 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் மூன்றாவது நாளாக மேற்கொண்ட உணவுத் தவிப்புப் போராட்டம் இன்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அறிவித்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கமலேஸ்வரன் ஆகியோர், போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியதனைத் தொடர்ந்து இந்த முடிவு எடுப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி முதல் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சனிக்கிழமை முதல் உணவுத் தவிப்புப் போராட்டமாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.