Home இலங்கைநகைகளை திருடிய குற்றத்திலும் , திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திலும் இருவர் கைது

நகைகளை திருடிய குற்றத்திலும் , திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திலும் இருவர் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் , வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரும் , திருடிய பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் கைதான நபரும் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

மீசாலைப் பகுதியில் வயோதிப பெண்மணி ஒருவர் தனிமையில் வசித்து வந்த வீடொன்றினுள் கடந்த 23ஆம் திகதி உட்புகுந்த திருடன் , ஒரு சங்கிலி , ஒரு சோடி காப்பு , இரண்டு மோதிரங்கள் உள்ளிட்ட 08 பவுண் தங்க நகைகளையும் , ஒரு தொகை அமெரிக்கன் டொலர்ஸ் பணத்தையும் திருடி சென்றுள்ளாா்..
இது குறித்து வயோதிப பெண் சாவகச்சேரி  காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து . காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , ஒரு தொகை நகைகள் மீட்கப்பட்டன. அத்துடன் சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் , நகைகளை வாங்கிய மற்றைய நபரையும் காவல்துறையினர் கைது செய்து , குறித்த நபரிடம் இருந்தும் ஒரு தொகை நகைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் , இருவரையும் சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More