59
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு இலங்கையின 25ஆவது இராணுவத் தளபதி ஆவார். தற்போதைய இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே தனது இரண்டாவது சேவை நீடிப்புக்கு அமைய இதுவரை சேவையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் காஞ்சன பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.
Spread the love