421
இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் விலகியுள்ளதாக இலங்கை காவல்துறை தொிவித்துள்ளது.
அதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தொிவித்துள்ளது
இதேவேளை இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் மீதும் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

