54
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாா்.
மஹிந்த ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் கடந்த 27ம் திகதி இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love