ஸ்கொட்லாந்தில் மீளவும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவிடமிருந்து பிளவடைவது தொடர்பில் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நாட்டின் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் (Nicola Sturgeon ) இது பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
பிரிடெக்ஸ் உள்ளிட்ட முக்கிய விடயங்களின் போது ஸ்கொட்லாந்தின் கருத்துக்களை பிரித்தானியா உதாசீனம் செய்துள்ளதாகவும் இவ்வாறான நிலையில் எதிர்காலத்திலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான மாற்றத்தை ஸ்கொட்லாந்து மக்கள் விரும்புகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் செயற்படுவதே சிறந்தது என அந்நாட்டு முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜன் குறிப்பிட்டுள்ளார். எனினும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்து இன்னமும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 comment
ஜக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து செல்ல வாக்கெடுப்பு நடத்தப் படவேண்டும் ஸ்கொட்லாந்து , மானரோசம் உள்ளவர்கள் கேட்க்கலாம் , நாங்கள் அப்படி கோரிக்கை வைக்கலாமோ கிடையாது , இனப்படு கொலை நடத்திய கொலைகாரனை காப்பாற்றுவதற்க்கு கால அவகாசம் கொடுக்கும் காக்கைவன்னியர் கூட்டம் நாங்கள் , மாகாணசபையிலே தீர்மானத்தை கிழித்தெறிந்து சிங்களத்தின் மனதை குளிர்வித்துள்ளோம் ஆளும் கட்சி எதிர்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், அடுத்த பாரளுமன்ற தேர்தல் தொகுதி ஆசனகனவிலும் சொகுசு வாகன கனவிலும் மிதற்க்கும் எங்களால் தமிழ் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தும்படி கோரிக்கை வைத்தால் க கா வன்னியர்களுக்கு கோபம் பொத்துக் கொண்டுவராதா , எங்கள் வயிற்றுப் பிழைப்பை நாங்களே கெடுக்கலாமா , நீங்கள் வாக்கெடுப்பு நடத்தி பிரிந்து செல்லுங்கள் அம்மா எங்களுக்கு அது வேண்டாம் சிங்களம் போடும் எலும்புத் துண்டே போதும் , அது தான் எங்களுக்கு தேவாமிர்தம் , அது தான் காக்கைவன்னியர் கூட்டத்தின் பொன்மொழி, ராஜன்,