உலகம்

ஒபாமா, ட்ராம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டமைக்கு ஆதாரம் கிடையாது – கொன்வே


அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒடடுக் கேட்டமைக்கு ஆதாரம் கிடையாது என வெள்ளை மாளிகை ஆலோசகர்  கெல்லியன்னே கொன்வே (Kellyanne Conway )தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரக் காலத்தில் ட்ராம்பின் தொலைபேசியை ஒபாமா ஒட்டுக் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், டொனால்ட் ட்ராம்பின் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தம்மிடம் எவ்வித ஆதாரங்களும் கிடையாது கொன்வே தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், ஒபாமா வேறும் வழிகளில் உளவு பார்த்திருக்கலாம் எனவும் அதற்கு சாத்தியம் உண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்தக் குற்ச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply