33
யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காரைநகர் கடற்பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 10 தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ததுடன் , அவர்களின் படகொன்றினையும், படகினுள் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை , கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தினர். அதன் போது கைதான 10 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது
Spread the love