310

யாழ்ப்பாணம் , நெல்லியடி பகுதிகளில் , செப்பு கம்பிகளை திருடுவதற்காக தொலைபேசி இணைப்பு வயர்களை இனம் தெரியாத நபர்கள் அறுத்து செல்வதாக நெல்லியடி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொலைபேசி இணைப்பு வயர்கள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 08 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. அறுக்கப்பட்ட வயர்களின் பெறுமதி சுமார் 12 இலட்ச ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது .


Spread the love

