Home இலங்கையோசிதவிடம் இருந்து 05 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

யோசிதவிடம் இருந்து 05 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

by admin

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோசித ராஜபக்ஸவிடம் இருந்த ஏழு துப்பாக்கிகளில் ஐந்து துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சகம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யா கோத்தா தெரிவித்துள்ளாா்.

பாதுகாப்பு அமைச்சில், இன்று புதன்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை  தெரிவித்துள்ளாா்.

இதேவேளை  தனிநபர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் துப்பாக்கிகளில் இருந்து 182  துப்பாக்கிகள் மட்டுமே மீள பெறப்பட உள்ளதாகவும் தெரிவித்த  பாதுகாப்பு செயலாளர்,யோசித ராஜபக்ஸவிடம் மேலும் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதாகவும், வேறு எந்த துப்பாக்கியும் இதுவரை ஒப்படைக்கப்படவில்லை எனவும் தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More